[கொழும்பு, இலங்கை]- தை 29, 2020 , தை 23, 2020 அன்று, சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சினுடைய (Ministry of Environment and Wildlife Resources ) கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை (MEPA), SLYCAN அறக்கட்டளையுடன் இணைந்து, கம்பாஹா மாவட்டத்தில் சதுப்புநில சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் சமூக வாழ்வாதார மேம்பாட்டுக்கான சாத்தியங்களை அடையாளம் காணுதல் என்ற கருப்பொருளில் பங்குதாரர்களுடனான செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.
“The Gateway Hotel, Airport Garden Hotel” இல் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையினுடைய (MEPA) பொது முகாமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி டொக்டர் பி . வி ரேனி பிரதீப் குமாரா (Dr P.B. Terney Pradeep Kumara, General Manager/ Chief Executive Officer of MEPA ) இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
சதுப்புநில காடுகள் பெருமளவில் கடலோர சுற்றுச்சூழல் பகுதியை உருவாக்குகின்றது. அவை காற்றிலிருந்து கார்பனை வடிகட்டுவதுடன், கரையோரத்தை பாதுகாக்கின்றன, பெரும்பாலான கடல்வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடங்களை வழங்குகின்றன, மேலும் கட்டுமானங்களுக்கான மூலப்பொருட்கள், உணவு, கைவினைப்பொருட்கள் மற்றும் மருந்துக்கான மூலப்பொருட்களை வழங்குகின்றன. அவை இயற்கை அழகின் தளமாக, கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ள தளமாக காணப்படுவதுடன், மேலும் உள்ளூர் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் முக்கியமாக அமைகின்றது.
இலங்கையின் கடற்கரை ஓரங்களில் இருபத்தி இரண்டு வகை சதுப்பு நில தாவர இனங்கள் செழித்து வளர்கின்றன, ஆனால் அவை கடந்த காலங்களில் இருந்து அழிவை சந்தித்துவருகின்றன. சதுப்புநிலப் பகுதிகளை மீட்டெடுப்பது மற்றும் விரிவாக்குவது இலங்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைவடைய செய்யவும் மற்றும் கடலோர சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்கு உதவவும் வழிவகுக்கின்றது. தங்களைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கு, சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் சதுப்புநில ஆப்பிள்களை அறுவடை செய்வதிலிருந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவில் முதலீடு செய்வது வரை பல பொருளாதார வாய்ப்புகளை வழங்குகின்றன. மாவட்டத்தின் சதுப்புநில மறுசீரமைப்பு , பாதுகாப்பான வாழ்வாதார மேம்பாடு மற்றும் பொருளாதார பல்வகைப்படுத்தலுடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதே இந்த ஆலோசனையின் நோக்கமாகும், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தளமான டிகோவிட்ட(Dikowita) பகுதியில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆலோசனையை வழிநடத்திய டொக்டர் பி . வி ரேனி பிரதீப் குமாரா (Dr P.B. Terney Pradeep Kumara) குறிப்பிடுகையில் தற்போது டிகோவிட்ட(Dikowita) தளமானது மாசுபாடுகளால் பாதிக்கபடுகின்றது. இந்த சதுப்புநில தளத்தை மீட்டமைக்க ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை செயல்படுத்தப்படுவது முக்கியம் என வலியுறுத்தினார்.
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்துள்ள சமூகங்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த, SLYCAN அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வோசிதா விஜேநாயக்க (Ms. Vositha Wijenayake , Executive Director – SLYCAN Trust), “இந்த தளத்தில் தற்போதுள்ள மாசுபாட்டை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க முனைகிறோம் என்று நம்புகிறேன், மேலும் “ சுற்றுச்சூழல் சுற்றுலாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் தேசிய அளவில் சதுப்பு நிலங்களில் பணிபுரியும் முக்கிய பங்குதாரர்களால் அடையாளம் காணப்பட்ட பிற தொடர்புடைய நடவடிக்கைகள், குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் சமூகத்துடன் இணைந்து செயற்பட மற்றும் அவ் மாவட்டத்தில் நடத்தப்படும் நடவடிக்கைகள் இலங்கையில் சதுப்புநில மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பொருந்தும் வகையில் அளவிடப்படலாம்” எனவும் தனது கருத்தை குறிப்பிட்டிருந்தார்.
சதுப்புநில குழந்தை பருவ இனங்களை அமைத்தல் மற்றும் முறையான கழிவு நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறையும் இப்பகுதியில் செயல்படுத்த விவாதிக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகும். இந்த நடவடிக்கைகள் சமூகம் உட்பட பல பங்குதாரர் செயல்முறை மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆலோசனையின் தொடர்ச்சியாக, மாசி மாத நடுப்பகுதியில் ஒரு கள வருகை இப்பகுதியில் வாழ்வாதார விருப்பங்களை சிறப்பாகக் கண்டறிய திட்டமிடப்பட்டது, மேலும் சுற்றுச்சூழல் அமைப்பை நன்கு புரிந்துகொள்ள உதவும் ஒரு பல்லுயிர் கணக்கெடுப்பாக இது அமைகிறது.
காலநிலை மாற்றம் , விலங்கு நலன், அத்துடன் சமூக நீதிக்கு இடையூறான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஆகியவற்றின் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கான உள்ளூர் மற்றும் உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிக்க ஒரு கூட்டு நடவடிக்கையில் SLYCAN அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. கொள்கை ஆலோசனைகள் , செயல் பிரச்சாரங்கள், தரை மட்ட நடவடிக்கை (கிராம), ஒத்த எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்த கூட்டு நடவடிக்கைகள், விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இவ் அமைப்பு நோக்கங்களை அடைகிறது. சதுப்புநில சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட SLYCAN அறக்கட்டளையின் நீல - பசுமை பாதுகாப்பாளர்கள் திட்டம் இலங்கையில் உள்ள மிட்சுபிஷி கூட்டமைப்பு (Mitsubishi Corporation) மற்றும் “Drowning Islands” போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் தகவலுக்கு: info@slycantrust.org
SLYCAN Trust is a non-profit think tank. It has been a registered legal entity in the form of a trust since 2016, and a guarantee limited company since 2019. The entities focus on the thematic areas of climate change, adaptation and resilience, sustainable development, environmental conservation and restoration, social justice, and animal welfare. SLYCAN Trust’s activities include legal and policy research, education and awareness creation, capacity building and training, and implementation of ground level action. SLYCAN Trust aims to facilitate and contribute to multi-stakeholder driven, inclusive and participatory actions for a sustainable and resilient future for all.