இலங்கையின் உணவு முறைமைகள்  மற்றும் காலநிலை இடர் :வழங்கல் மற்றும் மதிப்பு/பெறுமதி  சங்கிலித்தொடர்  முழுவதும் மீண்டுவரும் தன்மையை கட்டியெழுப்புதல்

November 10, 2020

அறிமுகம்


உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படும் மக்களுக்கு தொழில்துறை வேளாண்மை/ விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலிகள் ஆனது அதிக அளவு உணவை செலவு குறைந்த மற்றும் வினைத்திறனான முறையில் உற்பத்தி செய்வதில் வெற்றிகரமாக காணப்படுகின்றது. மேலும் இந்த நடைமுறைகள் இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், இந்த வேளாண்மை மற்றும் உணவு முறைமைகள் குறிப்பிடத்தக்க சிக்கல்களை தோற்றுவிக்கின்றது என்றே கூறமுடியும். அதாவது ஒரு சிக்கலான மதிப்பீடு மற்றும் பலவீனமற்ற விநியோகச் சங்கிலிகள்,  பச்சை வீட்டு வாயுக்கள் வெளியேற்றத்தின் அதிகரிப்பில் பங்களிப்பு, உணவு சந்தை ஒதுக்கீட்டில் சிக்கல்கள், கழிவு உற்பத்தி அதிகரித்தல் மற்றும் விவசாய நிலங்கள் , சுற்று சூழல் அமைப்புக்களை அழித்தல் போன்ற பல குறிப்பிடத்தக்க பிரச்சனைகளுக்கு வழிகோலுபவையாகின்றது.


உலக அளவில், உற்பத்தி செய்யப்படும் உணவில் அண்ணளவாக கால் பகுதியானது  உணவு வழங்கல் சங்கிலியுடன் ஏற்படும் இழப்புகள் மற்றும் வீண்விரயமாக்கல் போன்ற காரணங்களால் சாப்பிடுவதற்கு பாவிக்காத வகையில் போகின்றது. அதே நேரத்தில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் நீண்டகால பட்டினியில் காணப்படுகின்றனர். அங்கே உணவு எவ்வாறு அறுவடை செய்யப்படுகிறது, சேமிக்கப்படுகிறது, பதப்படுத்தப்படுகிறது மற்றும் கொண்டு செல்லப்படுகிறது என்பதில் வினைத்திறன் இன்மை சந்தை தோல்விக்கு  காரணமாக இருக்கலாம் என்ற ஒதுக்கீடு சிக்கலை இது தெளிவாகக் குறிக்கிறது. மேலும், புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவாக அதிகரித்து வரும் வெப்பம், வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்குகள் மூலம் விவசாய நிலங்கள் ஆபத்தை எதிர்நோக்குகின்றன. அத்துடன் தற்போது காணப்படுகின்ற ‘COVID-19’ நெருக்கடி தற்போதுள்ள விநியோகச் சங்கிலிகளின் வினைத்திறன் அற்ற போக்கை எடுத்துக்காட்டுகிறது. எனவே உலக அளவில், உணவு முறைகள் நெகிழக்கூடியவையாகவும், இடையூறுகளைத் தாங்கி மீளவும் போதுமான உணவு விநியோகத்தை உறுதிசெய்ய குறிப்பிடத்தக்க முயற்சிகள் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.


குறிப்பாக இலங்கையில், 1.7 மில்லியன் நபர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடாகக் கருதப்படுகிறார்கள், இது மக்கள் தொகையில் சுமார் 8% ஆக காணப்படுகிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் பொதுவானதாக காணப்படுகின்றது. அதே வேளையில், உலகில் இந்த வயதினரிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் மிக உயர்ந்த விகிதத்தில் இலங்கை உள்ளது கவலைக்குரியது. அத்துடன் தாய்மார்களிடையேயும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாகவுள்ளது கண்டறியப்பட்டுள்ளது, அது தொழில்த்துறை பகுதியான எஸ்டேட் (Estate) துறையில் அதிகம் காணப்படுகிறது. அதேசமயம், வேளாண்மை, மீன்வள மற்றும் கால்நடைத் துறைகளால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து உணவுகளிலும் சுமார் 30% வினைத்திறனற்ற உற்பத்தியின் போக்கு, நுகர்வோர் விரயம், போக்குவரத்து மற்றும் விநியோக பிரச்சினைகள் காரணமாக வீணடிக்கப்படுகிறது. மாறிவரும் காலநிலை மற்றும் ‘COVID-19’ போன்ற பிற நெருக்கடி சூழ்நிலைகளின் மத்தியில், இலங்கையின் உணவு முறைமையை மேம்படுத்த மற்றும் அதன் விநியோகச் சங்கிலிகளின் வினைத்திறனான செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவைப் பெறுவது தற்போதுள்ள பிரச்சனைகளை புரிந்துகொண்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சாத்தியமான தீர்வினை கொண்ட நாடாக அமைய முக்கியம் பெறுகின்றது.


இலங்கையில் உணவு முறைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் பகுப்பாய்வு


இலங்கையின் உணவு முறையானது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளை உள்ளடக்கியது. இது முறையே 78% இறக்குமதி செய்யப்படுகின்ற உணவு நுகர்வினையும் 22% உள்நாட்டு உணவு நுகர்வினையும் கொண்டுள்ளது. அரிசி, இறைச்சி, முட்டை, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை உள்நாட்டுத் தேவையின் பெரும்பகுதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், கோதுமை, போத்தலில் அடைக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட மீன், பருப்பு வகைகள், பால் பவுடர், சர்க்கரை/ சீனி மற்றும்  தாவர அடிப்படையிலான  எண்ணெய் வகைகள் என குறிப்பிடத்தக்க பல பகுதிகள் இந்தியா, சீனா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து எமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. 


பல இடைத்தரகர்கள் மற்றும் அவர்களுடைய  செயல்முறைகளை உள்ளடக்கிய வழங்கல் மற்றும் மதிப்பு சங்கிலிகளின் சிக்கலான தன்மை காரணமாக இலங்கை பல ஆண்டுகளாக அதன் உணவு முறைகளுக்குள் வினைத்திறனற்ற போக்கை அனுபவித்து வருகிறது. ‘COVID-19’ தொற்றுநோய் குறிப்பாக இலங்கையின் உணவு முறைகளின் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. ஊரடங்கு உத்தரவு காலத்தில் விநியோக பரப்புக்கள்  சரிந்தன, சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது, மேலும் உணவு நெருக்கடி  மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை காணப்பட்டன. மேலும், குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீதான கட்டுப்பாடுகள் உட்பட இறக்குமதி கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. இது மேலும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. மேலும் இறக்குமதி நிறுத்தப்பட்டதால் உணவு முறைக்கு அவசியமான உள்ளீடுகள் ரீதியிலும் நாட்டின் உணவு உற்பத்தித் துறையை பாதித்தது, இதன் விளைவாக கால்நடை மருத்துவம், இரசாயன உரங்கள் மற்றும் உயர்தர விதைகள் போன்ற பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது.  கடந்த தசாப்தங்களில் இலங்கை தீவு முழுவதும் உணவுப் பற்றாக்குறையை அனுபவிக்கவில்லை என்ற போதிலும், இது போன்ற நெருக்கடிகள் வாழ்வாதாரங்கள், ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய சமூகங்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


விவசாயம்


இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 7% விவசாயத்துறை பங்களிப்பு செய்கிறது, அதேநேரத்தில் சுமார் 25% தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. இது இலங்கைக்கு பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல் சமூக கலாச்சார காரணங்களுக்காகவும் ஒரு முக்கிய துறையாக காணப்படுகின்றது. அத்துடன் இது விவசாயிகள், இடைத்தரகர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களின் மத்தியில் ஒரு சிக்கலான அமைப்பு முறைமையையும்  கொண்டுள்ளது.


பொதுவாக, விவசாய விநியோகச் சங்கிலி தொடர் ஆனது கீழே குறிப்பிடுவதை போல் செயற்படுத்தப்படுகின்றது.


உள்ளீட்டு விநியோகிகள் → விவசாயிகள்   → வர்த்தகர்கள் → உணவு நிறுவனங்கள் → சில்லறை வியாபாரிகள் / ஏற்றுமதியாளர்கள் → நுகர்வோர். 


விவசாய மதிப்பு சங்கிலி தொடரினை பார்க்கின்றபோது நான்கு வகைகள் காணப்படுகின்றது. 


அவையாவன : 


 1.  சிதைந்த அல்லது சந்தை நிலவர அடிப்படையிலான மதிப்பு சங்கிலிகள் - ஏற்றுமதியாளர்கள் மற்றும் செயலிகளுக்கு சர்வதேச சந்தைகளுடன் தொடர்பு இல்லாத துண்டு துண்டான அமைப்புகள். இங்கே தகவல் ஓட்டத்தில் ஒரு இடைவெளி காணப்படும். .


 1. பலவீனமாக இணைக்கப்பட்ட மதிப்பு சங்கிலிகள் - இந்த மதிப்பு சங்கிலிகளில் ஏலம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, மேலும் விலை நிர்ணயம் மிகவும் வெளிப்படையானது. இது பொதுவாக இலங்கையில் தேயிலை துறையில் காணப்படுகிறது.


 1. வலுவாக இணைக்கப்பட்ட அல்லது பிணைப்புடைய சங்கிலிகள் - முகவர்கள் மற்றும் வணிக இணைப்புகள் மூலம் இணைக்கப்படுகிறார்கள், மேலும் இரு திசைகளிலும் அறிவின் பரிமாற்றம் உள்ளது. இது பெரும்பாலும் நியாயமான வர்த்தகம் மற்றும் சேதன துறைகளில் காணப்படுகிறது. 


 1. செங்குத்தாக ஒருங்கிணைந்த சங்கிலிகள் - முகவர்கள் விநியோகச் சங்கிலிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காண்கின்றனர், மேலும் இந்த முகவர்களிடையே குறிப்பிடத்தக்க தொடர்புகள் உள்ளன. பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி போன்ற உணவு வழங்கல் நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே நிறுவனத்தால் இந்த சங்கிலிகளில் நடத்தப்படுகின்றன.


விவசாய விநியோகச் சங்கிலியில் உள்ள இடைத்தரகர்கள் அல்லது சேகரிப்பாளர்கள் பொதுவாக எதிர்மறையாகக் கருதப்படுகிறார்கள், ஏனெனில் அவை விநியோகச் சங்கிலியில் தேவையற்ற சேர்த்தல்களாகவும், விநியோகசெலவுகளை அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகின்றன. மேலும், மேல்நிலை மற்றும் கீழ்நிலை அறிவு பரிமாற்றத்தின் அடிப்படையில் அவை ஒரு தடையாக கருதப்படலாம். அவை தகவல் பரிமாற்றத்தை சமச்சீரற்ற தன்மையை உருவாக்கி, விவசாயிகளுக்கு சந்தை செயல்பாடுகள் குறித்த அறிவு இல்லாததை விட்டுவிடுகின்றன. ஆயினும்கூட, விவசாய விளைபொருட்களை தொகுத்தல் மற்றும் கொண்டு செல்வது மற்றும் விவசாயிகளுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும்/ வியாபாரிகளுக்கும் இடையிலான தேவை மற்றும் விநியோகத்தை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்காக அவை முக்கியமானவை ஆகும். 


இலங்கையின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் விவசாயத் துறையும் அதன் வழங்கல் மற்றும் மதிப்பு சங்கிலிகளும்  பல சிக்கல்களை அனுபவிக்கின்றன:


 • பயிர் விளைச்சல் தேக்கமடைதல் மற்றும் உற்பத்தித்திறன் குறைதல். இவை வரட்சி மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை தாக்கங்களால் மோசமடைகின்றன. மேலும் விவசாய உற்பத்தித்திறனை இரட்டிப்பாக்குவதற்கான நிலையான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான சாத்தியத்தை இது கேள்விக்குள்ளாக்குகிறது. (எஸ்.டி.ஜி 2, இலக்கு 2.3 )


 • குறிப்பாக ‘COVID-19’ இன் நெருக்கடியின் போது விவசாய உள்ளீடுகளான உரம் மற்றும் விதைகள் போன்றவற்றிற்கு தடைசெய்யப்பட்ட அணுகல், அத்துடன் உள்கட்டமைப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட தொழிலாளர் இயக்கம் ஆகியவை நாட்டின் விவசாய உற்பத்தியை பாதிக்கிறது. மேலும், வழங்கல் மற்றும் மதிப்பு சங்கிலிகளில் வினைத்திறனற்ற போக்கு இழப்பு மற்றும் வீணாக்கல்களுக்கு வழிவகுக்கின்றது. சுமார் 30-40% ஆனா விவசாய பயிர்கள் மதிப்பு சங்கிலியுடன் வீணடிக்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


 • சிக்கலான விநியோகச் சங்கிலிகள் காரணமாக அதிக உணவு பரிமாற்ற தொலைதூரங்கள். எடுத்துக்காட்டாக, கத்தரிக்காய் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து கொழும்பை வந்தடைகிறது, இது மேல் மாகாணம் முழுவதும் மறுபகிர்வு செய்யப்பட வேண்டும். இது விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், விளைபொருட்களுக்கு மேலும் சேதம் விளைவிக்கும்.


 • காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் நிலையற்ற வானிலை முறைமைகள், அத்துடன் இறக்குமதி வரிகள் தொடர்பிலான அடிக்கடி மாற்றங்கள் மற்றும் கட்டணமில்லாத தடைகள் காரணமாக விவசாய விளைபொருட்களின் விலைகள் உயர்கின்றன. • மிகவும் வளர்ச்சியடையாத சந்தை தகவல் முறைமை . பலவீனமான திட்டமிடல் வழிமுறைகள் மற்றும் முன்னோக்கி ஒப்பந்தங்களின் செயல்பாட்டின் பற்றாக்குறை காரணமாக தரவுகளின் பற்றாக்குறை உள்ளது, இது தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் பொருந்தாத தன்மையை உருவாக்குகிறது. விவசாயிகளுக்கு அறிவு மற்றும் சந்தை தரவுகளுக்கான அணுகல் இல்லை, இதனால் அவர்கள் எதை வளர்க்க வேண்டும் என்பதற்கான அறிகுறியை வழங்கும்.


 • உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டியிட சிறியளவிலான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சிரமம்


 • குறிப்பிடத்தக்க பதிவு செய்யப்படாத விவசாயம் மற்றும் முறைசாரா உழைப்பு, குறிப்பாக பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது .
மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு


மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு துறை விநியோகச் சங்கிலியில் உள்ளீட்டு விநியோகத்தவர்கள், கடலோர, நன்னீர் மற்றும் ஆழ்கடல் மீனவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், உள்ளூர் / பிராந்திய மீன் சந்தைகள், ஏற்றுமதி செயலாக்க மையங்கள் மற்றும் நுகர்வோர் என்போரை உள்ளடக்குகின்றது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 2% பங்களிப்பிற்கு இந்தத் துறை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் நபர்களைக் கொண்டுள்ளது. இலங்கை உணவுக்கு மீன்வளமானது விலங்கு புரதத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை வழங்குகிறது மற்றும் பல சமூகங்களுக்கு முதன்மை புரத மூலமாக இது காணப்படுகின்றது. 


மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு விநியோக சங்கிலிகளுக்குள் உள்ள பல முக்கிய சிக்கல்கள் கீழே சுட்டிக்காட்டப்படுகின்றன:


 • காலநிலை மாற்றம் காரணமாக குறிப்பாக வானிலை மாற்றங்கள் தன்மையில் கடலோர மீன்வள பங்குகளின் குறைப்பு மற்றும் அதிகப்படியான சுரண்டல்.


 • விநியோகச் சங்கிலியுடன் சேர்ந்த பெறுமதியின் கூட்டலை பிரதிபலிக்கும் முறையிலான விலை பொறிமுறையின் பற்றாக்குறை.


 • அறுவடையின் தரம் மற்றும் ஊட்டச்சத்து அளவைப் பராமரிக்க சரியான அறுவடைக்கு பிந்தைய நுட்பங்கள் இல்லாமை. (Post- harvesting Techniques)


 • விநியோகச் சங்கிலி வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் போன்ற சில முக்கிய பங்குதாரர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், விநியோகச் சங்கிலியில் ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர், இதன் விளைவாக குறிப்பிடத்தக்க பெறுமதியின் கூட்டல் இல்லாமல் விலை அதிகரித்தல்.


 • குறிப்பாக மீன்பதப்படுத்துதலின் அடிப்படையில் பெண்கள் நிகழ்த்தும் முறைசாரா உழைப்பு போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்.கால்நடைகள்


இலங்கையில் நடைபெறும் முதன்மை கால்நடை தொடர்பான உற்பத்திகளாக கோழிப்பண்ணை மற்றும் பால் பண்ணை ஆகியவை காணப்படுகிறது. இங்கே  கால்நடை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% கோழிப்பண்ணை வளர்ப்பில் ஆகும். இந்தத் துறை அதன் விநியோகச் சங்கிலிகளில் உள்ளீட்டு விநியோகத்தவர்கள், கால்நடை / கோழி வளர்ப்பு விவசாயிகள், சேகரித்தல் மற்றும் குளிரூட்டும் மையங்கள், செயலாக்க மையங்கள், பொதிசெய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் மையங்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பல பங்குதாரர்களைக் கொண்டுள்ளது.


இலங்கையின் கால்நடைத் துறை பல சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

 

 • காலநிலை தொடர்பான தாக்கங்கள் : அதிகரித்த  வெப்பநிலை, வரட்சி, வெள்ளம், நன்னீர் குறைதல், புயல்கள் , அத்துடன்  பூச்சிகள் மற்றும் நோய்  தாக்கங்கள்.


 • அதிகப்படியான சுரண்டல் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாக மேய்ச்சல் நிலத்தின் குறைப்பு/துண்டாக்கப்படல்.


 • குறைந்த தொழில்நுட்ப அறிவு, குறிப்பாக கால்நடைகள் மற்றும் சரியான கழிவு முகாமைத்துவ நுட்பங்களுடன் தொடர்புடைய உயிரியல் அபாயங்கள் தொடர்பான முறைமைகள் குறைந்தளவில் காணப்படுதல்.


 • போக்குவரத்து மற்றும் விநியோக செயல்பாட்டின் போது அதிகரிக்கும் இழப்புகள் மற்றும் கழிவுகள்.


நாட்டின் மூன்று முதன்மையான உணவு உற்பத்தித் துறைகளைப் பரிசீலிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது, இலங்கையில் விவசாய முறைகள் மற்றும் வழங்கல் மற்றும் மதிப்புச் சங்கிலிகள் ஏற்கனவே பல பலவீனங்களையும் வினைத்திறனற்ற போக்கையும்  சந்தித்து வருகின்றன. ‘COVID-19’ தொற்று நெருக்கடிகள் மற்றும்  காலநிலை பேரழிவுகள் போன்றவை இந்த கட்டமைப்பு சிக்கல்களை மோசமாக்குகின்றன, உணவுப் பாதுகாப்பை சமரசம் செய்கின்றன, அத்துடன்  நுகர்வோர் மற்றும் விவசாயத்தை மேற்கொள்பவர்களை  காயப்படுத்துகின்றன. அதன்படி, இலங்கை உணவு முறை மற்றும் அதன் விநியோகச் சங்கிலிகளின் மாற்றம் மிக முக்கியமானதாகும். பரிந்துரைகள்


உணவு உற்பத்தியின் நீடித்த தன்மையைப் பேணுவதற்கும், நாட்டிற்குள் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை உணவு முறையை நெகிழ்திறன் கொண்டதாகவும்  மற்றும் மீளுருவாக்கம் செய்யும் உணவு முறையாக மாற்றுவது முக்கியமாகும்.


மீளுருவாக்கம் செய்யும் சொத்து மேலாண்மை ஆனது காபன் தீவிரமான ஒரு உணவு அமைப்பிலிருந்து வட்டமாக செயல்படும் ஒன்றிற்கு மாறுவதைக் குறிக்கிறது.   அத்துடன் காபன்-எதிர்மறை பொருளாதாரமாக செயல்படும் ஒரு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களின் மூடிய சுழல்களுடன் மாறுவதையும் குறிக்கிறது. 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “Regenerative Organic Standard” (ROC)  சுட்டிக்காட்டியுள்ளபடி, மீளுருவாக்கம் செய்யும் உணவு முறைகளுக்கான மாற்றம் உலக அளவில் தொடங்கிய ஒன்றாகும்.  இலங்கையில் ஒரு மீளுருவாக்கம் செய்யும் உணவு முறையை உருவாக்குவது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சேதமடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை சரிசெய்வதற்கும், உணவு உற்பத்தித் துறையில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் மிக முக்கியமானது. மேலும் உள்ளூர் உணவு முறைகளின் பின்னடைவை மேம்படுத்தல் ஆனது  காலநிலை பேரழிவுகள் மற்றும் பிற நெருக்கடிகள் போன்ற இடையூறுகளைத் தாங்கி மீட்க உணவு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல், உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான உணவு விநியோகத்தை உறுதி செய்தல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.


இலங்கையின் உணவு அமைப்புகளின்/ முறைமைகளின் நிலைத்திருப்புத்தன்மை, பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கும் மீளுருவாக்கம் மற்றும் மீள்உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளக்கூடிய குறிப்பிட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:


 • சிறுதொழில் விவசாயிகளை வலுப்படுத்தல், அத்துடன் பெண் விவசாயிகளைக் கருத்தில் கொண்டு வலுப்படுத்தல்.  நல்ல தரமான விதைகள் மற்றும் உரங்களுக்கு சிறந்த அணுகலை வழங்குதல், உள்ளூர் விநியோகச் சங்கிலிகளில் முதலீடு செய்தல் மற்றும் விவசாய அறிவுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்குகின்றது. 


 • இடை/ ஊடு பயிர் மற்றும் விவசாய காடு வளர்ப்பு பயிற்சி, வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கை  தடுக்கும் பயிர் வகைகளை மேம்படுத்துதல் உட்பட பயிர் மற்றும் விதை பல்வகைப்படுத்தலை மேம்படுத்துதல். 


 • சமூக அடிப்படையிலான காலநிலை தழுவல் நடவடிக்கைகளை செயல்படுத்துதல்.


 • விவசாய சுற்றுச்சூழல் அமைப்புகளினுடைய மறுசீரமைப்பு மற்றும் முகாமைத்துவம். இது தொட்டி மறுசீரமைப்பு , நீர் மற்றும் மண் முகாமைத்துவம் என்பவற்றை உள்ளடக்கிய வகையில் காணப்படவேண்டும். 


 • உணவு உற்பத்தித் துறையில் காபன் மற்றும் பிற பச்சை வீட்டு விளைவு வாயுக்களின்  வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் காலநிலை மாற்றத்தைக் தணிக்கும் திட்டங்களை செயல்படுத்துதல். (எடுத்துக்காட்டாக மீளுருவாக்கம் செய்யும் விவசாயத்தின் மூலம்)


 • மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளுக்கு நிலையான மீன்பிடித்தல் மற்றும் விலங்கு வளர்ப்பு முறைகள் தொடர்பில் கல்வி கற்பதற்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுதல் மற்றும் வழிவகுத்தல். 


 • கால்நடைத் துறைகளுக்கு  உள்ளூர் இனப்பெருக்கம் மற்றும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் முகாமைத்துவம்  குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல்.


 • உணவு வழங்கல் சங்கிலிகளில் அனைத்து பங்குதாரர்களுக்கும் சந்தை தரவை வழங்குதல்.


 • அரசாங்கத்தால் கடன் மற்றும் காப்பீடு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் அத்துடன் தேவைக்கேற்ப கூடுதல் இடர் பரிமாற்ற வழிமுறைகளை உருவாக்குதல்.


 • விநியோக சங்கிலி இழப்புகளைக் குறைக்க தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் டிஜிற்றல்  உணவு மற்றும் ஊட்டச்சத்து கண்காணிப்பு முறையை (Digital food and nutrition surveillance system) செயல்படுத்துதல்.


மேற்காட்டிய வகையில் , இவ் உத்திகளைச் கையாள்வதன்  மூலம், இலங்கை “காலநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏற்ப, பிற இடையூறுகளின் விளைவுகளைக் கொண்டிருக்கும்  தன்மையை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ப, உணவு முறை வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க  மற்றும் நாட்டின் மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய ஒரு மீளுருவாக்கம் மற்றும் நெகிழ்திறன் கொண்ட உணவு முறையை நிறுவ நிலைத்திரு ரீதியில் செயல்பட முடியும். 


Sources

Achieving Food Security: A Plausible Reality or a Pipedream for Sri Lanka? (2017, August 23). Retrieved October 09, 2020, from https://www.ips.lk/talkingeconomics/2017/08/23/achieving-food-security-a-plausible-reality-or-a-pipedream-for-sri-lanka/

Arulananthan, K. (n.d.). Climate Change Research on Fisheries and Aquaculture: A Review of Current Status. In B. Marambe (Ed.), Proceedings of the Workshop on Present Status of Research Activities on Climate Change Adaptations (pp. 121-126). Colombo, Sri Lanka: Sri Lanka Council for Agricultural Research Policy. 

Batini, N., Lomax, J., & Mehra, D. (2020, July 14). Why Sustainable Food Systems are Needed in a post-COVID World [Web log post]. Retrieved October 09, 2020, from https://blogs.imf.org/2020/07/14/why-sustainable-food-systems-are-needed-in-a-post-covid-world/

Fishery sector structure: Sri Lanka. (n.d.). Retrieved October 12, 2020, from http://www.fao.org/fi/oldsite/FCP/en/LKA/profile.htm

Folk, E. (2020, November 13). The Importance of a Regenerative Food System for Sustainable Agriculture [Web log post]. Retrieved October 09, 2020, from https://regenerationinternational.org/tag/resilient-food-systems/

Food and Agriculture Organization of the United Nations. (2018). Food Security and Nutrition in City Region Food System Planning: Colombo. Retrieved October 09, 2020, from https://ruaf.org/assets/2019/12/Policy-brief-on-food-security-Colombo.pdf

Food System Resilience. (n.d.). Retrieved October 09, 2020, from https://clf.jhsph.edu/projects/food-system-resilience

Gravis, L. (2020, June 12). We need to build a healthy and resilient food system. Retrieved October 09, 2020, from https://www.greenbiz.com/article/we-need-build-healthy-and-resilient-food-system

Hirimuthugodage, D. (n.d.). Agri-food Value Chains in Sri Lanka: Dairy and Fisheries Value Chains [Presentation]. https://www.ips.lk/wp-content/uploads/2017/03/IPS_IFPRI_FoodValueChainWorkshop_AgriFoodValueChainSL_April2016.pdf

Impact of COVID19 on food supply chains in Sri Lanka. (2020, June 02). Retrieved October 09, 2020, from https://www.netherlandsandyou.nl/latest-news/news/2020/06/02/impact-of-covid19-on-food-supply-chains-in-sri-lanka

Jayantha, S., & De Silva, D. D. (2010). Supply Chain Management in the Aquaculture Industry: The Case of Food Fish Aquaculture in Sri Lanka. Sabaragamuwa University Journal, 9(1), 147-169. doi:10.4038/suslj.v9i1.3741

Ranganathan, J., Waite, R., Searchinger, T., & Hanson, C. (2018, December 05). How to Sustainably Feed 10 Billion People by 2050, in 21 Charts [Web log post]. Retrieved October 09, 2020, from https://www.wri.org/blog/2018/12/how-sustainably-feed-10-billion-people-2050-21-charts

Rapid Assessment on Food Distribution in Sri Lanka (Rapid Assessment Study). (n.d.). Federation of Sri Lanka Local Government Authorities.

Regenerative agriculture and food systems. (n.d.). Retrieved October 09, 2020, from https://www.oneearth.org/regenerative-agriculture-and-food-systems/

Samarajiva, R. (2020, May 19). Resilient food supply: By command or through markets? DailyFT. Retrieved October 09, 2020, from http://www.ft.lk/columns/Resilient-food-supply-By-command-or-through-markets/4-700390

Samarawickrema, S. (2016, September 21). Sustainability now: Food waste is not an option. DailyFT. Retrieved October 12, 2020, from http://www.ft.lk/article/568796/Sustainability-now%2013Food-waste-is-not-an-option

Sri Lanka. (n.d.). Retrieved October 13, 2020, from http://www.fao.org/faostat/en/#country/38

Sri Lanka Country Brief. (n.d.). Retrieved October 13, 2020, from https://www.wfp.org/countries/sri-lanka

Stamm, A., Jost, C., Kreiss, C., Meier, K., Pfister, M., Schukat, P., & Speck, H. A. (2006). Strengthening value chains in Sri Lanka’s agribusiness: A way to reconcile competitiveness with socially inclusive growth? [Scholarly project]. In German Development Institute. Retrieved October 09, 2020, from https://www.die-gdi.de/uploads/media/Studies_15.pdf

Tackling Chronic Undernutrition in Sri Lanka's Plantations. (n.d.). Retrieved October 14, 2020, from https://www.worldbank.org/en/country/srilanka/publication/tackling-chronic-undernutrition-in-sri-lankas-plantations

The World Bank, Food and Agriculture Organization (2018). Prevalence of Undernourishment - Sri Lanka. Retrieved October 12, 2020, from https://data.worldbank.org/indicator/SN.ITK.DEFC.ZS?locations=LK

Thibbotuwawa, M. (2020, May 27). New face of hunger: Building a resilient food system in Sri Lanka in an age of pandemic. DailyFT. Retrieved October 09, 2020, from http://www.ft.lk/opinion/New-face-of-hunger-Building-a-resilient-food-system-in-Sri-Lanka-in-an-age-of-pandemic/14-700724

World Integrated Trade Solution (2017). Sri Lanka Food Product Imports. Retrieved October 14, 2020, from https://wits.worldbank.org/CountryProfile/en/Country/LKA/Year/LTST/TradeFlow/Import/Partner/by-country/Product/16-24_FoodProd


Related Articles

No items found.

Thematic Areas

No items found.

Tags

No items found.
About the Author
No items found.